ஆலங்குளம் தொகுதி வெற்றியை கடையம் பகுதிதான் நிர்ணயிக்கும்
கடையம், அக். 16: கடையம் கிழக்கு ஒன்றிய திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம், பாப்பான்குளத்தில் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் குமார் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற நெல்லை மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஆவுடையப்பன், முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆகியோர் பேசுகையில், கடையம் ஒன்றிய பகுதிதான் ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதியின் திமுகவின் வெற்றியை தீர்மானித்து வருகிறது, என்றனர். கூட்டத்தில் ஆலங்குளம் தொகுதி மேற்பார்வையாளர் கணேஷ்குமார் ஆதித்தன், ஒருங்கிணைந்த மாவட்ட இளைஞரணி முன்னாள் துணை அமைப்பாளர் சேர்மச்செல்வன், மாவட்ட துணை செயலாளர் மைக்கேல், பொதுக்குழு உறுப்பினர் ரவிச்சந்திரன், மாவட்ட கவுன்சிலர் மைதீன் பீவி, கோதர் மைதீன், கருத்தப்பிள்ளையூர் கிளை செயலாளர் அந்தோனி, கடையம் யூனியன் சேர்மன் செல்லம்மாள் முருகேசன், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட துணை அமைப்பாளர் சிங்கதுரை, அயலக அணி மாவட்ட துணை அமைப்பாளர் பஞ்சு அருணாசலம், வி.கே.புரம் நகர செயலாளர் கணேசன், ஆழ்வார்குறிச்சி பேரூர் முன்னாள் செயலாளர் பொன்ஸ், பஞ். தலைவர்கள் கீழ ஆம்பூர் மாரிசுப்பு, பாப்பான்குளம் முருகன், மேல ஆம்பூர் குயிலி லட்சுமணன், திருமலையப்பபுரம் மாரியப்பன், பஞ். துணை தலைவர்கள் பொட்டல்புதூர் துரை, கீழ ஆம்பூர் முத்தையா, இளைஞரணி ராஜகணேஷ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.