நெல்லையில் வரும் 24ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்
நெல்லை, அக். 16: நெல்லை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், வரும் 24ம் தேதி நடக்கிறது. நெல்லை மாவட்டத்தில் அக்டோபர் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், வரும் 24ம் தேதி மாவட்ட கலெக்டர் சுகுமார் தலைமையில் கலெக்டர் அலுவலக வளாகத்தின் 2ம் தளத்தில் உள்ள கூட்டரங்கில் காலை 10.30 மணிக்கு நடக்க உள்ளது. இக்கூட்டத்தில் அனைத்துத் துறை அலுவலர்களும் கலந்து கொண்டு விவசாயிகளின் கோரிக்கைகளின் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து பதில் அளிக்கின்றனர். எனவே விவசாயிகள் குறை தீர்ப்பதற்காக நடைபெறும் இக்கூட்டத்தில் நெல்லை மாவட்ட விவசாயிகள் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்களும் கலந்து கொள்ளுமாறு கலெக்டர் சுகுமார் கேட்டு கொண்டார்.
தென்காசியில் சுயசார்பு பாரதம் பாஜவின் உறுதிமொழி ஏற்பு தென்காசி, அக். 16: தென்காசி நகருக்குட்பட்ட ரதவீதி பகுதிகளில் தீபாவளி பண்டிகையின் போது நமது வணிகத்தின் நமது தயாரிப்புகளை வாங்க வேண்டும், நமது தயாரிப்புகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். தாய்மொழிக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என்ற உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியை தென்காசி பாஜ நகர்மன்ற உறுப்பினர் பொன்னம்மாள் கருப்பசாமி துண்டு பிரசுரம் வழங்கி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் நகர தலைவர் சங்கரசுப்பிரமணியன், நகர பொதுச்செயலாளர் லட்சுமண பெருமாள், உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாவட்ட தலைவர் கருப்பசாமி, மாவட்ட துணை தலைவர் ராஜ்குமார், நகர துணை தலைவர் மாரியப்பன், கிளை தலைவர் சண்முகராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.