குண்டாசில் வாலிபர் கைது
நெல்லை,செப்.16: நெல்லை பெருமாள்புரம் அன்புநகர் தமிழ்நாடு வீட்டு வசதி காலனியை சேர்ந்த மாரியப்பன் (38). சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாநகர துணை கமிஷனர் வினோத் சாந்தாராம், பாளை உதவி கமிஷனர் சுரேஷ், பாளை அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் கோமதி பரிந்துரைத்தனர். இதை ஏற்றுக்கொண்ட மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாதிமணி இதற்கான உத்தரவை பிறப்பித்தார். அதன்பேரில் மாரியப்பனை குண்டர் சட்டத்தின் கீழ் கைதுசெய்து பாளை சிறையில் அடைத்தனர்.
Advertisement
Advertisement