கட்டிட பொறியாளர்கள் சங்கம் சார்பில் திசையன்விளை பள்ளிக்கு உபகரணங்கள் வழங்கல்
திசையன்விளை,செப்.16: திசையன்விளை கட்டிட பொறியாளர்கள் சங்கம் சார்பில் முஸ்லிம் துவக்கப்பள்ளிக்கு தேவையான மேஜை, நாற்காலிகளை சங்க தலைவர் ஆனந்தராஜ் வழங்கினார். நிகழ்வில் தலைமை ஆசிரியை லீனு வரவேற்றார். சங்கச் செயலாளர் எட்வின் சாமுவேல், பொருளாளர் வர்கீஸ், ஒருங்கிணைப்பாளர் சுந்தர், துணைத் தலைவர் முருகப்பெருமாள், துணைச்செயலாளர் லிங்கராஜ், முன்னாள் பொருளாளர் ராபின், நிர்வாக கமிட்டி உறுப்பினர் சக்திவேல், கவுன்சிலர் நடேஷ் அரவிந்த், திமுக மாவட்ட சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளர் நஸ்ருதீன் ஆலிமா மைதீன் மற்றும் ஜமாத் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். உதவி ஆசிரியர் மாலதி நன்றி கூறினார்.
Advertisement
Advertisement