இளம்பெண் மாயம்
களக்காடு,ஆக.15: களக்காட்டில் இளம்பெண் மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். களக்காடு அருகேயுள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 18 வயது இளம்பெண் 12ம் வகுப்பு வரை படித்து விட்டு, வீட்டில் இருந்து வந்தார். நேற்று முன்தினம் அவரது தாய் ஆலயத்திற்கு சென்றுள்ளார். பின்னர் வீட்டிற்கு திரும்பி வந்து அவர் பார்த்த போது வீட்டில் இருந்த இளம்பெண் திடீரென மாயமானார். இதனால் பதறிய அவர் பல்வேறு இடங்களில் தேடியும் இளம்பெண் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவுசெய்த களக்காடு இன்ஸ்பெக்டர் ராஜா, மாயமான இளம்பெண்ணை தேடி வருகிறார்.