களக்காட்டில் கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
களக்காடு,ஆக.15: களக்காட்டில் கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்த சுகாதார அதிகாரிகள் கடையின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தனர். களக்காட்டில் நகராட்சி சுகாதார ஆய்வாளர் முத்துராமலிங்கம், உணவு பாதுகாப்பு அதிகாரி அனு மற்றும் போலீசார், நகராட்சி பணியாளர்கள் இணைந்து கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், பிளாஸ்டிக் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இதில் 12 கடைகளில் 11 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதுது கண்டு பிடிக்கப்பட்டது. அவைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்ததோடு கடையின் உரிமையாளர்களுக்கு ரூ.3,200 அபராதம் விதித்தனர்.