வள்ளியூரில் தொழிலாளி தற்கொலை
நெல்லை, செப்.14:அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி ராஜகோபால் (55). இவர் குடும்பத்துடன் அங்கு வசித்து வந்தார். இந்நிலையில் வள்ளியூரிலுள்ள நண்பர் கூறியதையடுத்து 7 மாதங்களுக்கு முன்னர் ராஜகோபால் வள்ளியூருக்கு வந்தார். அவரது நண்பர் அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் துப்புரவு பணி வாங்கி கொடுத்தார். இதையடுத்து பள்ளியில் தங்கியிருந்து பணிகளை மேற்கொண்டு வந்தார். சம்பவத்தன்று பள்ளி நிர்வாகத்திடம் ஊருக்கு சென்று வருவதாக கூறிவிட்டு வள்ளியூர் தெப்பக்குளத்திற்கு வந்தார். அங்கு படியில் பைகளை வைத்து விட்டு திடீரென தெப்பகுளத்தில் குதித்தார். சிறிது நேரத்தில் நீரில் மூழ்கி அவர் இறந்தார். இதனையறிந்த வள்ளியூர் போலீசார், தீயணைப்பு வீரர்கள் வந்து ராஜகோபாலின் உடலை மீட்டு நாகர்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வள்ளியூர் போலீசார் வழக்குப்பதிந்து ராஜகோபால் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.