நெல்லை கிழக்கு மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் புதிய வாக்காளர்களை சேர்க்க வேண்டும்
பணகுடி, டிச.13:நெல்லை மாவட்டம் ராதாபுரம், நாங்குநேரி தொகுதிகளில் தகுதியுள்ள வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்து வாக்கு சதவீதம் பெருக்கிட கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கிரகாம்பெல் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், தேர்தல் ஆணையம் மூலம் தற்போது நடைபெற்று வரும் தீவிர வாக்காளர் சிறப்பு சீர்திருத்தப் பணிகளில் புதிய தகுதியுடைய வாக்காளர்களாக 01.01.2026ம் தேதி 18 வயது பூர்த்தியாகும் அனைவரும் வாக்காளர் பட்டியலில் இடம் பெறுவதற்கும், அவர்களது ஜனநாயக கடமைகளை ஆற்றுவதற்கு ஏதுவாக நெல்லை கிழக்கு மாவட்டத்தில் அடங்கியுள்ள ராதாபுரம் மற்றும் நாங்குநேரி சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட தொகுதிப் பார்வையாளர்கள், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், பிஎல்ஏ-2, பிஎல்சி, பிடிஏ ஆகியோர் அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். ஏற்கனவே உள்ள வாக்காளர்கள் பட்டியலில் இடம் பெற்ற விபரங்களை சரிபார்த்து பதிவேற்ற உதவியது போலவே, புதிய வாக்காளர்களை பட்டியலில் இடம் பெறச் செய்வதற்கு உரிய படிவத்தினை நிரப்பி சமர்பிப்பதற்கு திமுகவினர் உதவி செய்திடவும் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.