பாவூர்சத்திரத்தல் கிறிஸ்துமஸ் கீதபவனி
பாவூர்சத்திரம், டிச.13:இயேசு கிறிஸ்து பிறந்த தினமான டிசம்பர் 25ம் தேதி ஆண்டு தோறும் கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இயேசு கிறிஸ்து பிறப்பை அறிவிக்கும் வகையில் இல்லங்களுக்கு சென்று கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை கூறுவது வழக்கம். அதேபோல இந்தாண்டு நெல்லை திருமண்டலம் பாவூர்சத்திரம் சி.எஸ்.ஐ. கிறிஸ்து ஆலயத்தில் கிறிஸ்துமஸ் கீத பவனி நடைபெற்றது. ஆலயத்தை சேர்ந்த குடும்பத்தினர் வீடுகளுக்கு மாலை நேரங்களில் சேகர குருவானவர் பர்னபாஸ் தலைமையில் சபை ஊழியர்கள் இம்மானுவேல்ராஜ், தினகர் சந்தோஷசிங் மற்றும் கமிட்டி அங்கத்தினர், இளைஞர்கள், கிறிஸ்துமஸ் தாத்தாவுடன் குழுவாக சென்று இசைக்கருவிகளை இசைத்து பாடல் பாடி இனிப்புகள், காலண்டர் வழங்கி கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
Advertisement
Advertisement