தூத்துக்குடி அருகே மளிகை கடையைஉடைத்து திருட்டு
ஸ்பிக்நகர், டிச. 12: தூத்துக்குடி அடுத்த முள்ளக்காடு நேருஜி நகர் பகுதியை சேர்ந்தவர் ரத்தினதுரை(70). இவர், இதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் கடையை பூட்டி விட்டு சென்று விட்டார். நேற்று காலை கடையை திறக்க வந்த ரத்தினத்துரை, கடையின் ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது கல்லாவில் வைத்திருந்த 50 பத்து ரூபாய் நாணயங்கள், குளிர்பானங்கள், சிப்ஸ், பிஸ்கட் வகைகள் என ரூ.6 ஆயிரம் மதிப்பிலான சிற்றுண்டி வகைகளை திருடு போனது தெரிய வந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் முத்தையாபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Advertisement
Advertisement