மூக்குப்பீறியில் கிராமப்புற தமிழ்மன்ற கூட்டம்
நாசரேத், டிச. 12: நாசரேத் அருகேயுள்ள மூக்குப்பீறியில் கிராமப்புறத்தமிழ் மன்ற கூட்டம் நடந்தது. பேராசிரியர் காசிராஜன் தலைமை வகித்தார். தமிழ்மன்ற நிறுவனர் கவிஞர் மூக்குப்பீறி தேவதாசன் வரவேற்று நேருவை பற்றி கவிதை வாசித்தார். கவிஞர் சிவா, நேருவின் சிந்தனைகள் என்ற தலைப்பில் கவிதை வாசித்தார். தூத்துக்குடி கவிஞர் நெல்லை தேவன் எழுதிய ‘வலிகளின் ஊர்வலம்’ கவிதை நூலை நாசரேத் இலக்கிய ஆர்வலர் சுவர்ணலதா ஆய்வுரை நிகழ்த்தினார். நெல்லை தேவன், காசிராஜன், அய்யாக்குட்டி, கண்ணகுமார விஸ்வரூபன் ஆகியோர் பேசினர். நிகழ்ச்சியில் ஆல்வின், மந்திரம், ஜாண்பிரிட்டோ, பகவதிபாண்டியன், ரத்தினகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். தமிழ்மன்ற பணியாளர் ஆசிரியர் விவின் ஜெயக்குமார் நன்றி கூறினார். ஏற்பாடுகளை மன்ற நிறுவனர் கவிஞர் மூக்குப்பீறி தேவதாசன் செய்திருந்தார்.
Advertisement
Advertisement