விகேபுரம் அருகே மாற்றுத்திறன் மாணவர்களுக்கு பல் மருத்துவ முகாம்
விகேபுரம், அக்.12: விகேபுரம் அருகே அடையகருங்குளத்தில் உள்ள அன் னை ஜோதி சிறப்பு பள்ளியில் மாணவர்களுக்கு நேற்று பல் மருத்துவ முகாம் நடந்தது. இதில் பல் மருத்துவர் சவுந்தரி பாலா கலந்துகொண்டு முகாமினை சிறப்பான முறையில் நடத்தினார். முகாமில் ஆசிரமத்தில் இருக்கும் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு பல் பரிசோதனை செய்து பல்லை பராமரிப்பது எப்படி என்று குழந்தைகளுக்கும், அவர்களதுபெற்றோர்களுக்கும், சிறப்பு குழந்தைகளை கவனிக்கும் ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டது. பள்ளியின் செயலாளர் செல்வகுமார், பள்ளி நிர்வாகி ஜெயபிரகாஷ் ஆகியோர் நன்றி கூறினர்.
Advertisement
Advertisement