வள்ளியூர் மரியா மகளிர் கல்லூரியில் பழங்குடி மக்களின் வாழ்வியல் குறித்த சர்வதேச கருத்தரங்கு
வள்ளியூர், அக்.12: நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் ஆங்கிலத்துறை சார்பில் வள்ளியூர் மரியா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் பழங்குடி மக்களின் வாழ்வியல் குறித்த சர்வதேச கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டு கருத்தரங்கை தொடங்கி வைத்தார். கல்லூரி தலைவர் லாரன்ஸ், செயலர் ஹெலன் ,முதல்வர் சுஷ்மா ஜெனிபர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் பல்கலைகழக பதிவாளர் சாக்ரடீஸ், தேர்வாணையர் பாலசுப்ரமணியம், ஆங்கில துறை தலைவர் பிரபாகர் மற்றும் பேராசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர் 2 நாட்கள் நடக்கும் சர்வதேச கருத்தரங்கில் பழங்குடி மக்களின் வாழ்வியல் குறித்த ஆய்வுகளை அறிஞர்கள் சமர்ப்பித்தனர். இதில் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களை சேர்ந்த கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
Advertisement
Advertisement