கங்கைகொண்டான் கைலாசபுரம் ரயில்வே கேட் இன்று மூடல்
நெல்லை,நவ.11: கங்கைகொண்டான் கைலாசபுரம் ரயில்வே கேட் இன்று காலை முதல் மாலை வரை தண்டவாளம் பராமரிப்பு பணிக்காக மூடப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மாற்று பாதையில் செல்ல தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது. நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் கைலாசபுரம் ரயில்வே கேட்டில் தண்டவாள பராமரிப்பு பணி இன்று 11ம் தேதி நடக்கிறது. இதையொட்டி கைலாசபுரம் ரயில்வே கேட் இன்று காலை 9 மணி முதல் மாலை 5.30 மணிவரை மூடப்படுகிறது. இவ்வழியாக செல்லும் வாகனங்கள், பொதுமக்கள் மாற்றுபாதையில் செல்ல தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
Advertisement
Advertisement