உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்
கடையநல்லூர், அக். 11: கடையநல்லூர் நகராட்சியில் நேற்று நடந்த உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமை நகர்மன்ற தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் துவக்கி வைத்தார். கடையநல்லூர் நகராட்சி 24, 25 மற்றும் 33வது வார்டுகளுக்குட்பட்ட பொதுமக்களுக்கு சிறப்பு முகாம் நடந்தது. முகாமில் சொத்துவரி பெயர் மாற்றம் மற்றும் வருவாய்த்துறை, மகளிர் உரிமைத்தொகை, கூட்டுறவுத்துறை, காவல்துறை, மின்வாரியத்துறை, சுகாதாரத்துறை உள்ளிட்ட 15 துறைகளுக்கான கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. இந்த முகாமை நகர்மன்ற தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் துவக்கி வைத்தார். தாசில்தார் பாலசுப்பிரமணியன், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் மைதீன் பட்டாணி, நகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன், பொறியாளர் அப்துல்காதர், உதவி பொறியாளர் அன்னம், கணக்கர் புஷ்பநாதன், சுகாதார அலுவலர் பிச்சையா பாஸ்கர், ஆய்வாளர்கள் சிவா, மாதவராஜ், கவுன்சிலர்கள் முகமது மைதீன், செய்யது அலி பாத்திமா முன்னிலை வகித்தனர். திமுக வார்டு செயலாளர்கள் இப்ராகிம், அயூப்கான், மஸ்தான், காஜாமைதீன், ராமையா, நகர இளைஞரணி துணை அமைப்பாளர் சுகுமார், முன்னாள் மாணவரணி மணிகண்டன் மற்றும் அப்சரா பாதுஷா, முருகானந்தம், அயூப், ஹக்கீம், செல்லப்பா உள்பட பலர் கலந்து கொண்டனர். குருவிகுளம் அருகே அரசு பஸ் கண்டக்டரை தாக்க முயன்றவர் கைது பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கல் செங்கோட்டை, அக்.11: செங்கோட்டை மேலூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வரும் மாணவர்களுக்கு வாலிபால், நெட் உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்களை 12வது வார்டு கவுன்சிலர் இசக்கி துரை பாண்டியன் வழங்கினார். நிகழ்ச்சியில் வார்டு பிரதிநிதி நாட்டாமை ஆறுமுகம், குமார், செல்லதுரை, ராஜ், பூதத்தார் ,சண்முகராஜா, தொமுச ஐயப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.