சுத்தமல்லியில் மனைவியை வெட்டிய கணவன் கைது
நெல்லை,செப்.11: சுத்தமல்லியில் மது அருந்திவிட்டு மனைவியிடம் தகராறு செய்து அரிவாளால் வெட்டிய கணவனை போலீசார் கைது செய்தனர். நெல்லை மாவட்டம் சுத்தமல்லி அடுத்துள்ள நடுக்கல்லூரைச் சேர்ந்தவர் சுந்தரபாண்டியன் (33). இவரது மனைவி வள்ளி (27). சுந்தரபாண்டிக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. சுந்தரபாண்டியன் தினமும் குடித்து வந்ததால் கணவன், மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நேற்று மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்த அவர், மனைவியிடம் பணம் கேட்டு தகராறு ெசய்துள்ளார். ஆனால் வள்ளி பணம் தரமறுவிட்டார். ஆத்திரம் அடைந்த அவர் அரிவாளால் மனைவியை வெட்டி கொலை மிரட்டல் விடுத்தார். இதில் காயமடைந்த வள்ளி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து வள்ளி சுத்தமல்லி போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி சுந்தரபாண்டியனை கைது செய்தார்.