சிவகிரி பள்ளியில் வன உயிரின வார விழா
சிவகிரி, அக். 10: சிவகிரி சேனைத்தலைவர் மேல்நிலைப்பள்ளியில் வன உயிரின வார விழா நடைபெற்றது. பள்ளி செயலர் ஸ்டாலின் தலைமை வகித்தார். சிவகிரி வனச்சரகர் கதிரவன், தலைமை ஆசிரியர் சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வன காவலர்கள் ஆதிலட்சுமி, மகேஸ்வரி ஆகியோர் வன உயிரினங்கள் மற்றும் வனச்சட்டங்கள் குறித்து பேசினர். தொடர்ந்து மாணவர்களின் சந்தேகங்களுக்கு வனத்துறையினர் விளக்கம் அளித்தனர். இதில் வனத்துறை சம்பந்தமாக முக்கியத்துவம் வாய்ந்த கேள்விகள் கேட்ட மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் வனவர்கள் குமார், சந்தோஷ்குமார் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Advertisement
Advertisement