பொதுமக்கள் மனு மீது உடனடி ஆணை
திசையன்விளை, அக். 10: திசையன்விளை பேரூராட்சியில் அம்மா மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ் தலைமை வகித்தார். முன்னாள் லயன்ஸ் கவர்னர் சுயம்புராஜன் முன்னிலை வகித்தார். தாசில்தார் நாராயணன் வரவேற்றார். சபாநாயகர் அப்பாவு முகாமை துவக்கி வைத்து பயனாளிகளுக்கு பட்டா வழங்கி பேசுகையில், இந்த முகாமில் நீங்கள் கொடுக்கும் மனுக்களை முதல்வரிடம் நேரடியாக கொடுப்பது போன்று நினைத்து கொள்ளுங்கள். ஏற்கனவே உள்ள பணிகளுடன் சேர்த்து தான் அதிகாரிகள் இந்த பணியையும் செய்கிறார்கள். அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இங்கு வழங்கும் மனுக்களுக்கு ரசீது வழங்கப்படும்’ என்றார். முகாமில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை மனுக்கள் 333 உள்பட மொத்தம் 528 மனுக்கள் பெறப்பட்டது. இதில் 7 மனுக்களுக்கு உடனடி உத்தரவு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பேரூராட்சி செயல் அலுவலர் பால்ராஜ், மாவட்ட கவுன்சிலர் பாஸ்கர், பேரூராட்சி கவுன்சிலர்கள் கமலா நேரு, அலெக்ஸ், கண்ணன், உதயா, நகர இளைஞரணி துணை அமைப்பாளர் நெல்சன், லிங்கராஜ், சுபாஷ், எழில், ராஜா, புளியடிகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.