வரும் 13ம் தேதி மருத்துவ முகாம் நடைபெறும் வி.கே.புரம் பள்ளியில் கலெக்டர் ஆய்வு
வி.கே.புரம், செப். 10: வி.கே.புரம் பி.எல்.டபிள்யூ.எ பள்ளியில் வரும் 13ம் தேதி நலம் காக்கும் ஸ்டாலின் மெகா மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. இதையொட்டி நேற்று காலை மாவட்ட கலெக்டர் சுகுமார் பள்ளிக்கு வந்து முகாம் நடைபெறும் இடத்தையும், முகாமிற்காக நடைபெறும் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். நகராட்சி தலைவர் செல்வ சுரேஷ் பெருமாள், வட்டார மருத்துவ அலுவலர் அர்ஜூன் ஆகியோரிடம் மருத்துவ முகாமிற்கான ஏற்பாடுகள் குறித்தும் கேட்டறிந்தார். அப்போது அம்பை தாசில்தார் வைகுண்டம், நகராட்சி ஆணையாளர் குமார் சிங், பொறியாளர் முகமது ஆரிப், பணி மேற்பார்வையாளர் கோமதிநாயகம், சுகாதார ஆய்வாளர்கள் கணபதி, ராமன், ஆனந்த் மற்றும் நகராட்சி பள்ளி தலைமையாசிரியர் மீனா ஆகியோர் உடனிருந்தனர்.
Advertisement
Advertisement