ராதாபுரம் இளைஞருக்கு முதலமைச்சர் மாநில இளைஞர் விருது சபாநாயகர் அப்பாவு வாழ்த்து
ராதாபுரம், செப். 10: ராதாபுரத்தை சேர்ந்த பாரத மாதா பவுண்டேஷன் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமார். கடந்த 8 ஆண்டுகளாக பல்வேறு சமூக சேவைகளில் ஈடுபட்டு வருகிறார். ஆதரவற்றோர், முதியோர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோரை மீட்டு காப்பகங்களில் சேர்த்து உணவு, உடை, மருத்துவ உதவி வழங்கி மறுவாழ்வு மற்றும் பல சமூக சேவைகளை செய்து வருகிறார். இவரின் சேவைக்காக முதலமைச்சரின் மாநில இளைஞர் விருது - 2025ஐ பெற்றுள்ள நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவுவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
Advertisement
Advertisement