வீரவநல்லூரில் மின்சாரம் தாக்கி தொழிலாளி பரிதாப பலி
வீரவநல்லூர்,அக்.9: வீரவநல்லூரில் மின்சாரம் தாக்கியதில் தொழிலாளி பலியானார். வீரவநல்லூர் பஜனை மடம் தெருவை சேர்ந்தபீர்முகம்மது மகன் லியாகத் அலி (45). ஓட்டல் தொழிலாளியான இவர் நேற்று காலை அவரது வீட்டின் மொட்டை மாடியிலிருந்த கேபிள் டிவி செட்டாப் பாக்ஸ் வயரை தொட்டுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக லியாகத் அலி மீது மின்சாரம் தாக்கியது. இதில் மயங்கிய அவரை மீட்ட உறவினர்கள் உடனடியாக அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே லியாகத் அலி உயிரிழந்ததாக தெரிவித்தனர். தகவலின் பேரில் வீரவநல்லூர் போலீசார் லியாகத் அலி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வீரவநல்லூர் போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.
Advertisement
Advertisement