திசையன்விளை பகுதியில் நாளை மின்தடை
தியாகராஜ நகர், அக். 9: வள்ளியூர் மின்கோட்ட செயற்பொறியாளர் வளன் அரசு விடுத்துள்ள செய்தி குறிப்பு: திசையன்விளை துணைமின் நிலையத்தில் நாளை அக்.10ம்தேதி (வெள்ளி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதனால் அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை திசையன்விளை, மகாதேவன்குளம் அப்புவிளை, ஆனைக்குடி, முதுமொத்தான் மொழி, கூட்டப்பனை கூடுதாழை, விமனங்குடி ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement