இந்து முன்னணி கையெழுத்து இயக்கம்
தென்காசி, செப். 9: தென்காசியில் நகர இந்து முன்னணி சார்பில் திருச்செந்தூர் கோயில் தரிசன கட்டணத்தை ரத்து செய்ய வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. திருச்செந்தூரில் தினமும் மாலை 3 மணி முதல் மாலை 4 மணி வரை பொது தரிசனத்தை இடைநிறுத்தம் செய்து ரூ.500 கட்டண தரிசனம் நடைமுறைப்படுத்த இந்துசமய அறநிலையத்துறை முயற்சி செய்து வருகிறது. இதனை கண்டித்து தென்காசியில் நகர இந்து முன்னணி சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. மாவட்ட துணை தலைவர் இசக்கிமுத்து தலைமை வகித்தார். நகர தலைவர் நாராயணன், நகர துணை தலைவர் சொர்ணசேகர், நகர பொதுச்செயலாளர் மாதேஷ், நகர செயற்குழு உறுப்பினர் சூர்யா வெற்றி மணி, கிளை பொறுப்பாளர்கள் பார்த்திபன், செந்தில், முருகன், காந்தி, பூபதி, சங்கர், மகேஷ், விஜய், கலந்து கொண்டனர்.
Advertisement
Advertisement