மேலகரத்தில் பேரூர் திமுக பாக முகவர்கள் கூட்டம்
தென்காசி, அக். 8: மேலகரத்தில் பேரூர் திமுக சார்பில் பிஎல்ஏ 2 பாக முகவர்கள் கூட்டம் நடந்தது. பேரூர் திமுக செயலாளர் சுடலை தலைமை வகித்தார். பேரூராட்சி துணை தலைவர் ஜீவானந்தம் முன்னிலை வகித்தார். மேலகரம் பேரூர் திமுக பாக முகவர்கள், மேற்பார்வையாளர்கள் வழக்கறிஞர்கள் தாஹிராபேகம், சூர்யாபாண்டியன், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் கோமதிநாயகம், மாவட்ட ஆதிதிராவிடர் அணி அமைப்பாளர் இலத்தூர் பரமசிவன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வி ஆகியோர் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு சம்பந்தமான விளக்கங்கள் குறித்து ஆலோசனைகளை வழங்கினர். கூட்டத்தில் பி.எல்.ஏ.2 பாக முகவர்கள் கல்யாணிசுந்தரம், கணேசன், பாஸ்கர், விக்னேஷ், ரமேஷ், சிங்கத்துரை, குடியிருப்பு கணேசன், பகவதிராஜ், ராதா, முகேஷ், முருகேசன், மகாலட்சுமிகபிலன், காளிராஜா, சுந்தரம் என்ற சேகர், ஆயிரப்பேரி முத்துவேல், குற்றாலம் குத்தாலிங்கம் கலந்து கொண்டனர்.