களக்காட்டில் இந்து அமைப்பினர் மறியல் 39 பேர் கைது
களக்காடு, டிச.5: திருப்பரங்குன்றத்தில் கோர்ட் உத்தரவை அமல்படுத்த வலியுறுத்தி களக்காட்டில் சாலை மறியலில் ஈடுபட்ட இந்து அமைப்பினர் 39 பேரை போலீசார் கைது செய்தனர். திருப்பரங்குன்றம் மலையில் கோர்ட் உத்தரவுபடி தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று போராட்டம் நடத்திய பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கைது செய்யப்பட்டார். இதனை கண்டித்தும், திருப்பரங்குன்றத்தில் கோர்ட் உத்தரவை அமல்படுத்த வலியுறுத்தியும் களக்காட்டில் பாஜ, இந்து முன்னணி, விஷ்வ ஹிந்து பரிஷத், இந்து மகா சபா உள்ளிட்ட இந்து அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட 39 பேரை போலீசார் கைது செய்தனர்.
Advertisement
Advertisement