கோட்டைகருங்குளம் பகுதியில் மின்தடை ரத்து
தியாகராஜ நகர், டிச.6: வள்ளியூர் கோட்ட செயற்பொறியாளர் வளன் அரசு விடுத்துள்ள செய்தி குறிப்பு. கோட்டைகருங்குளம் துணை மின் நிலையத்தில் இன்று 06.12.2025 சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டிருந்தது. தற்போது நிர்வாக காரணங்களுக்காக பராமரிப்பு பணிகள் அன்றைய நாளில் ரத்து செய்யப்படுகிறது. எனவே இன்று 6ம்தேதி கோட்டைகருங்குளம், குமாரபுரம், வாழைதோட்டம், சீலாத்திகுளம், முடவன்குளம், தெற்கு கள்ளிகுளம், சமூகரெங்கபுரம், திருவெம்பலாபுரம் ஆகிய பகுதிகளில் தடையற்ற சீரான மின்விநியோகம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement