பொத்தகாலன்விளையில் பனை விதைகள் நடும் நிகழ்ச்சி
சாத்தான்குளம், டிச. 5: பொத்தகாலன்விளையில் சடையநேரி கால்வாய் கரையில் பனை விதைகள் நடும் பணி நடந்தது. சாத்தான்குளம் யூனியன் சாஸ்தாவிநல்லூர் அடுத்த பொத்தகாலன்விளையில் உள்ள சடையநேரி கால்வாய் கரை மற்றும் வைரவம்தருவை குளக் கரைகளில் 2500 பனை விதை நடும் பணி நடந்தது. சாத்தான்குளம் தாசில்தார் ராஜேஸ்வரி தலைமை வகித்து பனை விதை நடும் பணியை தொடங்கி வைத்தார். சாத்தான்குளம் தென்பகுதி விவசாயிகள் சங்க தலைவர் லூர்துமணி முன்னிலை வகித்து பனையால் ஏற்படும் நன்மைகள் குறித்தும், பனை விதைகள் நடுவதன் நோக்கம் குறித்தும் விளக்கி பேசினார். இதில் சங்க துணை தலைவர் ரவிச்சந்திரன், பொருளாளர் செல்வக்குமார், இயற்கை விவசாயி செந்தில், சங்க துணை செயலாளர் ஜெயக்குமார், ஆசிரியர்கள் தங்கதுரை, சந்திரா, சங்க செயற்குழு உறுப்பினர்கள் ஜஸ்டின் ஜெயராஜ், அருள், செல்வன் வெலிங்டன் மற்றும் சுவாமிநாதன், எப்ரேம், நெல்சன், ரூபி, மிக்கேல் அம்மாள், பால்வளத் துறை அதிகாரி பிரவீன், வேளாண் பணியாளர் சரத்குமார், பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர் எஸ்தர் ரஞ்சிதம், பாஜ தகவல் தொடர்பு பிரிவு மாநில செயலாளர் மங்கையர்க்கரசி, களப்பணியாளர்கள் ஜூலி, ஜோஸ்வின், சேவியர், எட்வின் சேவியர், சக்தி விக்னேஸ்வரன், தினேஷினி, ஹெலன் குமாரி, சுதாகர், சதீஷ் உள்ளிட்டோர் பங்கேற்று பனை விதைகளை நடவு செய்தனர்.