ரவணசமுத்திரம் ஊராட்சியில் கழிப்பறை தின விழிப்புணர்வு பேரணி
கடையம், டிச.2: கடையம் அருகே ரவணசமுத்திரம் ஊராட்சியில் உலக கழிப்பறை தினத்தை முன்னிட்டு ஊராட்சி மன்ற தலைவர் முகமது உசேன் தலைமையில் வட்டார ஒருங்கிணைப்பாளர் தர்மராஜ் முன்னிலையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ராமலட்சுமி, ஊராட்சி செயலர் மூக்காண்டி, சுகாதார ஊக்குநர் செல்வபட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Advertisement
Advertisement