இடைவிடாத ஸ்கேட்டிங் போட்டி ட்ரஷர் ஐலண்ட் பள்ளி மாணவர்கள் சாதனை
செங்கோட்டை, டிச.2: வெஸ்டர்ன் காட் இந்தியன் அகாடமி, பிபிபி ஸ்கேட்டிங் க்ளப் மற்றும் தென்காசி மாவட்ட ஸ்கேட்டிங் அசோசியேஷன் இணைந்து 30 நிமிட இடைவிடாத ஸ்கேட்டிங் நிகழ்வு நடைபெற்றது. இதில் செங்கோட்டை ட்ரஷர் ஐலண்ட் பள்ளி மாணவர்கள் அஸ்ரித், கரிஸித் சங்கர், ஆதில் மீரான், ஆதர்ஷ் நாத், முகம்மது அர்ஷத், முகம்மது ரியாஸ், ஆதில் ஆகியோர் பங்கேற்றனர். மாணவர்கள் அனைவருமே இப்போட்டியில் சிறப்பாக பங்குபெற்று தங்கள் திறமையை வெளிக்காட்டினர். மாணவர்களை, பள்ளி தாளாளர் ஷேக் செய்யது செய்யது அலி, முதல்வர் சமீமா பர்வீன் ஆகியோர் பாராட்டினர்.
Advertisement
Advertisement