திருச்செந்தூர் நகராட்சி 1வது வார்டு சிறப்பு கூட்டம்
திருச்செந்தூர், நவ. 1: திருச்செந்தூர் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் பொதுமக்களுக்கு அடிப்படை சேவைகளை மேம்படுத்துவது தொடர்பான வார்டு அளவிலான சிறப்பு கூட்டம் குமாரபுரம் 1வது வார்டு குமாரபுரத்தில் நடந்தது. அங்குள்ள பூங்காவில் நடந்த கூட்டத்துக்கு நகராட்சி துணை தலைவர் செங்குழி ரமேஷ் தலைமை வகித்தார். நகராட்சி ஆணையர் ஈழவேந்தன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டு தெருக்களில் பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றி திரியும் நாய்கள், பன்றிகளையும், போக்குவரத்துக்கு இடையூறாக கால்நடைகளை கட்டுப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கை மனுக்களை கொடுத்தனர். மனுக்களை பெற்றுக்கொண்ட துணை தலைவர் செங்குழி ரமேஷ் உடனடியாக மனுக்களுக்கு ஒருவார காலத்திற்குள் நடவடிக்கை எடுப்பதாக கூறினார். கூட்டத்தில் திருச்செந்தூர் நகர திமுக செயலாளர் வாள் சுடலை, திமுக நகர துணை செயலாளர் சுதா, நிர்வாகிகள் குருசு முத்து, அருணாச்சலம், ஆனந்த் ரொட்ரிகோ, சாமுவேல், தோப்பூர் சுரேஷ், செல்வம், நாதன், முத்து மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.