தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

புதிய மேலாளர் காபிரியேல் தேவ இரக்கம் சிஎஸ்ஐ மிஷன் மருத்துவமனையை ஆய்வு

தூத்துக்குடி,நவ.1: தூத்துக்குடி-நாசரேத் திருமண்டலத்தின் புதிய மேலாளராக பொறுப்பேற்றுள்ள காபிரியேல் தேவஇரக்கம் சி.எஸ்.ஐ மிஷன் மருத்துவமனையை ஆய்வு செய்தார். உயர்நீதிமன்ற உத்தரவுப்படி சி.எஸ்.ஐ தூத்துக்குடி - நாசரேத் திருமண்டலத்தின் நிர்வாகியாக முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி ஜோதிமணி திருமண்டல அலுவலகத்தில் மீண்டும் பொறுப்பேற்றுக்கொண்டார். இதேபோன்று தூத்துக்குடி - நாசரேத் திருமண்டலத்தின் புதிய மேலாளராக பணி நியமனம் செய்யப்பட்டுள்ள நெல்லை பேரின்பபுரத்தை சேர்ந்த காபிரியேல் தேவஇரக்கம் திருமண்டல அலுவலகத்தில் நிர்வாக பொறுப்பினை ஏற்றுக்கொண்டார். திருமண்டல நிதி ஆலோசகர் அன்பர்தாஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் காபிரியேல் தேவஇரக்கத்திற்கு வாழ்த்து தெரிவித்தனர். திருமண்டல மேலாளராகவும், திருமண்டலத்தின் அனைத்து துறைகளின் நிர்வாகியாகவும் பொறுப்பேற்ற காபிரியேல் தேவஇரக்கம் திருமண்டல நிர்வாகத்திற்கு உட்பட்ட அனைத்து துறைகளையும் ஆய்வு செய்தார்.

Advertisement

தொடர்ந்து ஸ்டேட்பேங்க் காலனியில் உள்ள தூத்துக்குடி - நாசரேத் திருமண்டல மிஷன் மருத்துவமனையும் ஆய்வு செய்து குறைகளை கேட்டறிந்தார். சாத்தான்குளத்தில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர் சாத்தான்குளம்,நவ.1: சாத்தான்குளம்-முதலூர் சாலையில் தற்போது வடிநீர் கால்வாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது. அந்த வடிநீர் கால்வாய் அமைக்கப்பட்ட பகுதியில் முதலூர் ஊராட்சி பகுதிக்கு செல்லும் குழாய் உடைந்து கடந்த 10 நாட்களாக குடிநீர் வீணாக சாலையில் தேங்கி வருகிறது. இதனால் சாலையும் சேதமாகி வருகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் குடிநீர் வடிகால்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் இன்னும் சீரமைக்கப்படாமல் உள்ளது. சாலை ஓரத்தில் தண்ணீர் தேங்கி வீணாகி வருவதால் பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். எனவே, குடிநீர் வடிகால்வாரிய அதிகாரிகள் பார்வையிட்டு சேதமான குடிநீர் குழாய் உடைப்பை உடனடியாக சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement

Related News