முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் தென்காசியில் வரும் 5, 6ல் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்கள் விநியோகம்
தென்காசி, அக். 1: தென்காசி மாவட்டத்தில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் வரும் 5 மற்றும் 6ம் தேதிகளில் பயனாளிகளின் வீட்டிற்கே சென்று குடிமைப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட உள்ளதாக கலெக்டர் கமல் கிஷோர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:தென்காசி மாவட்டத்தில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் அக்டோபர் 2025 மாதத்திற்கு (5.10.2025) ஞாயிறு மற்றும் (6.10.2025) திங்கள் ஆகிய தேதிகளில் பயனாளிகளின் வீட்டிற்கே சென்று குடிமைப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட உள்ளது. 70 வயதிற்கு மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் மாற்றுத் திறனாளி குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை தங்கள் இல்லங்களுக்கே நேரில் வந்து தொடர்புடைய நியாயவிலைக் கடை விற்பனையாளர்களால் குடிமைப் பொருட்கள் விநியோகம் செய்யப்படும். தகுதியுடைய குடும்ப அட்டைதாரர்கள் இத்திட்டத்தினை பயன்படுத்தி பயனடையலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.