நெல்லை, தென்காசி மாவட்டங்களில் அக்டோபர் மாதம் மின் குறைதீர் கூட்டம் நடைபெறும் தேதிகள் அறிவிப்பு
தியாகராஜ நகர், அக். 1: நெல்லை, தென்காசி மாவட்டங்களில் அக்டோபர் மாதம் மின் வாரிய குறைதீர் கூட்டங்கள் நடைபெறும் இடங்கள் மற்றும் நாள் விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி, அக்டோபர் 7ம் தேதி வள்ளியூர் கோட்ட அலுவலகத்தில் குறைதீர் கூட்டம் நடைபெறும். 10ம் தேதி சங்கரன்கோவில் கோட்ட அலுவலகத்திலும், 14ம் தேதி தென்காசி கோட்ட அலுவலகத்திலும், 17ம் தேதி கடையநல்லூர் கோட்டஅலுவலகத்திலும், 21ம் தேதி நெல்லை கிராமப்புற கோட்ட அலுவலகத்திலும், 24ம் தேதி நகர்புற கோட்ட அலுவலகத்திலும், அக்டோபர் 28ம் தேதி கல்லிடைகுறிச்சி கோட்ட அலுவலகத்திலும் குறை தீர் கூட்டம் நடைபெறும். அனைத்து கூட்டங்களும் பகல் 11 மணிக்கு நடைபெறும் என நெல்லை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அகிலாண்டேஸ்வரி தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement