திருமணமான 5 மாதத்தில் புதுப்பெண் மாயம்
நெல்லை, அக்.1: நெல்லையில் திருமணமான 5வது மாதத்தில் புதுப்பெண் மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ல்லை டவுன் காவல்பிறை தெருவைச் சேர்ந்தவர் பெரியசாமி. பிளம்பிங் வேலை பார்த்து வரும் இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சித்ரா (20) என்ற இளம்பெண்ணுக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் திருமணமானது. இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் இருந்து கடைவீதி சென்ற சித்ரா திடீரென மாயமானார். இதனால் பதறிய பெரியசாமி, உறவினர் மற்றும் தோழிகள் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் சித்ராவை கண்டுபிடிக்க முடியவில்லை. பின்னர் இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த டவுன் போலீசார் மாயமான சித்ராவை தேடி வருகின்றனர்.
Advertisement
Advertisement