தென்காசி பள்ளிகளில் சுதந்திர தின விழா
தென்காசி, ஆக.18: பழைய குற்றாலம் ஹில்டன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் சுதந்திர தினவிழாவை முன்னிட்டு தாளாளர் ஆர்.ஜெ.வி.பெல் தலைமை வகித்து தேசியக் கொடியேற்றினார். செயலாளர் கிரேஸ் கஸ்தூரி பெல் முன்னிலை வகித்தார். பள்ளியின் முதல்வர் மோன்சி கே மத்தாய், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். சுதந்திர தினவிழா பற்றிய உரையினை தமிழில் 8ம் வகுப்பு மாணவி ரோபிலஸும், ஆங்கிலத்தில் பிளஸ்2 மாணவி லட்சுமி தியாவும் வழங்கினர். பள்ளி முதல்வர் நன்றி கூறினார்.
குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு பள்ளியில் சுதந்திரதின விழா கொண்டாடப்பட்டது. இதில் கேம்பிரிட்ஜ் இண்டர்நேஷனல் சீனியர் செகண்டரி பள்ளியின் இயக்குநர் ஜோசப் லியாண்டர், ஆக்ஸ்போர்டு பப்ளிக் பள்ளியின் சட்ட ஆலோசகர்கள் மிராக்ளின் பால்சுசி, திருமலை, பள்ளியின் தாளாளர் அன்பரசி திருமலை ஆகியோர் தலைமை வகித்தனர். பள்ளியின் வழக்கறிஞரும், சட்ட ஆலோசகருமான உச்சநீதிமன்ற வழக்கறிஞர் திருமலை தேசியக்கொடி ஏற்றினார்.