நாங்குநேரியில் நிற்காத அரசு பஸ் மகளை அழைக்க 12 கி.மீ தூரம் காரில் துரத்திய தந்தை டிரைவர், கண்டக்டருடன் வாக்குவாதம்
நெல்லை, ஆக.18: நெல்லை மாவட்டம், நாங்குநேரியில் அரசு உத்தரவையும் மீறி பஸ் நிற்காமல் சென்றதால், தனது மகளை அழைத்துச் செல்வதற்காக காத்திருந்த தந்தை, பேருந்தை சுமார் 12 கிலோமீட்டர் தூரம் காரில் துரத்திச் சென்று மடக்கினார். டிரைவர் மற்றும் கண்டக்டருடன் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.நாங்குநேரி பகுதியைச் சேர்ந்தவர் தர்மலிங்கம். இவரது மகள் கோவை கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு விடுமுறைக்காக ஊருக்குப் புறப்பட்ட அவர், மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் இருந்து நாங்குநேரி செல்வதற்காக அரசு பஸ்சில் ஏறினார்.