திருக்குறுங்குடி பள்ளியில் புலிகள் தினம் கொண்டாட்டம்
களக்காடு, ஆக. 2: களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக சூழல் மேம்பாட்டு திட்டத்தின் சார்பில் களக்காடு அருகேயுள்ள திருக்குறுங்குடி யூனியன் துவக்கப்பள்ளியில் உலக புலிகள் தினம் கொண்டாடப்பட்டது. விழாவுக்கு திருக்குறுங்குடி சூழல் திட்ட சரகர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியை பூங்குமாரி முன்னிலை வகித்தார். வனவர் அப்துல் ரஹ்மான் வரவேற்றார். இதைத்தொடர்ந்து மாணவ-மாணவிகளுக்கு புலிகள் குறித்து பல்வேறு விழிப்புணர்வு போட்டிகள் நடத்தப்பட்டதோடு வெற்றிபெற்ற அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் தோத்தாத்திரி, முன்னாள் கிராம வனக்குழு தலைவர் பொன்னி வளவன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
Advertisement
Advertisement