தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

புதுச்சேரியில் ஆலை நிறுவி தமிழகத்தில் போலி மது விற்ற வழக்கில் மேலும் 3 பேர் தடுப்பு காவலில் கைது

 

Advertisement

விழுப்புரம், ஜூன் 26: புதுச்சேரியில் போலி ஆலை நிறுவி தமிழகத்தில் மதுபாட்டில் விற்பனை செய்த வழக்கில் மேலும் 3 பேர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதுவரை இந்த வழக்கில் 8 பேர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டம் பூத்துறை சோதனை சாவடியில் கடந்த மே 9ம் தேதி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தபோது போலி மதுபானங்கள் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.

மேலும் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள உளவாய்க்கால் பகுதியில் நிறுவப்பட்ட போலி மதுபான ஆலையை கண்டறிந்து சோதனை செய்தபோது போலி மதுபானம் தயாரித்து தமிழக பகுதிக்கு விற்பனைக்கு கொண்டு வந்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து 292 அட்டைப்பெட்டியில் 10,032 போலி மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து அனுமந்தையைச் சேர்ந்த ராஜசேகர், பால்ஜோசப் உள்ளிட்ட 18 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வழக்கில் முக்கிய குற்றவாளிகளான அனுமந்தை ராஜசேகர், சென்னை ராமாபுரம் பாண்டியன், செவிடங்குப்பம் மூர்த்தி, புதுச்சேரி கொம்பாக்கம் பிரபு, புதுச்சேரி உளவாய்க்கால் ரமேஷ்(எ) அதியமான் ஆகிய 5 பேர் ஏற்கனவே தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே நேற்று மேலும் 3 பேர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். புதுச்சேரி வில்லியனூரைச் சேர்ந்த சக்திவேல்(43), மரக்காணம் ரவிச்சந்திரன்(67), டி.நல்லாளம் பிரகாஷ்(36) ஆகிய மூன்று பேரும் தடுப்புகாவல் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க எஸ்பி சரவணன் ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.

இதனை ஏற்றுக்கொண்ட ஆட்சியர் ஷேக் அப்துல்ரஹ்மான் நேற்று அதற்கான உத்தரவு பிறப்பித்தார். இதனை தொடர்ந்து ஆரோவில் காவல் நிலைய போலீசார் மூன்று பேரையும் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இதுவரை போலி மதுபான வழக்கில் 8 பேர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Advertisement

Related News