கஞ்சா வைத்திருந்தவர்கள் கைது
தேவதானப்பட்டி, மே 17: தேவதானப்பட்டி எஸ்ஐ ஜான் செல்லத்துரை மற்றும் போலீசார் கெங்குவார்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது காமக்காபட்டி அருகே செல்லும் போது போலீசாரை கண்டதும் அங்கு நின்று கொண்டிருந்த மூன்று பேர் தப்பி ஓட முயன்றனர். போலீசார் அவர்களை மடக்கி பிடித்து விசாரித்த போது அவர்களிடம் 150 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து காமக்காபட்டியைச் சேர்ந்த மூக்கையா(55), பிரபாகரன் (30) சின்னசாமி (22) ஆகியோரை கைது செய்து அவர்களிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.