இலவச பொது மருத்துவ முகாம்
ஓட்டப்பிடாரம், ஆக.29: காவேரி மருத்துவமனை, பாஞ்சாலங்குறிச்சி ஊராட்சி மற்றும் தூத்துக்குடி குறிஞ்சி ரெஸ்டாரன்ட் ஆகியன இணைந்து இலவச பொது மருத்துவ முகாமை நடத்தியது. பாஞ்சாலங்குறிச்சி ஊராட்சி சிலோன் காலனியில் நடைபெற்ற முகாமில் காவேரி மருத்துவமனை மருத்துவர்கள், ரோட்டரி கிளப் மற்றும் குழுவினர் கலந்து கொண்டு சிறப்பு வசதி கொண்ட மருத்துவ வாகனத்திலேயே நோயாளிகளுக்கு இசிசி, எக்கோ சோதனைகள் செய்தும், இருதயம் மற்றும் பொது மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் தொடர்பான சிகிச்சைகளும் மருத்துவ ஆலோசனைகளையும் வழங்கினர். ஏற்பாடுகளை மருத்துவமனை பணியாளர்கள், ரெஸ்டாரன்ட் உரிமையாளர் வீரபாண்டி செல்லச்சாமி, முன்னாள் பஞ்சாயத்து தலைவர்கள் கமலாதேவி யோகராஜ் உள்ளிட்ட பலர் செய்திருந்தனர்.
Advertisement
Advertisement