ஆறுமுகநேரியில் ரயிலில் அடிபட்டு பெண் பலி
ஆறுமுகநேரி,செப்.27: ஆறுமுகநேரியில் ரயிலில் அடிபட்டு அடையாளம் தெரியாத பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி காணியாளர் தெரு பின்புறமுள்ள ரயில்வே தண்டவாளத்தில் நேற்று அதிகாலை காலை 5.30 மணியளவில் சென்னையில் இருந்து திருச்செந்தூர் வந்த செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் மோதி அடையாளம் தெரியாத பெண் பலியானதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் ரயில்வே போலீஸ் எஸ்ஐ ராமகிருஷ்ணன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் பலியான பெண்ணுக்கு சுமார் 42 வயது இருக்கும் என கூறப்படுகிறது. செந்தூர் ரயில் வரும் போது தண்டவாளத்தின் நடுவே அமர்ந்து தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். இருப்பினும் இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.