நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாத வாலிபர் கைது
சாத்தான்குளம், அக்.25: மெஞ்ஞானபுரம் அருகே உள்ள மாநாடு கிராமத்தை சேர்ந்தவர் அழகேசன் மகன் ரஞ்சித்(23). இவர், கடந்த 2020ம் ஆண்டு சாத்தான்குளம் பகுதியில் மணல் கடத்தியதாக போலீசார் கைது செய்து சாத்தான்குளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கு விசாரணைக்கு ரஞ்சித் ஆஜராகாமல் இருந்ததால் நீதிமன்றம் அவருக்கு பிடிவாரன்டு பிறப்பித்து உத்தரவிட்டிருந்தது. அதன் பேரில் சாத்தான்குளம் உதவி ஆய்வாளர் ஜோசப் கிங், சாத்தான்குளம் பகுதியில் பதுங்கியிருந்த ரஞ்சித்தை நேற்று முன்தினம் கைது செய்து சாத்தான்குளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
Advertisement
Advertisement