பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடி,அக்.25: தூத்துக்குடியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஓய்வூதியர் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பழைய ஓய்வூதியத்திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 70 வயது ஓய்வூதியர்களுக்கு 10 சதவீத உயர்வு வழங்க வேண்டும். அங்கன்வாடி பணியாளர், சத்துணவுப் பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,850 வழங்க வேண்டும். மருத்துவப்படி ரூ.1000 வழங்க வேண்டும். ஓய்வூதியர்களை பாதிக்கும் ஒன்றிய அரசின் வேலிடேசன் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். மூத்த குடிமக்களுக்கு கட்டணமில்லா பேருந்து வசதி செய்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி விவிடி சிக்னல், சிதம்பரநகர் பேருந்து நிறுத்தம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் பாபு தலைமை வகித்தார். சங்க செயலாளர் சிவசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். இதில் சங்க துணை தலைவர்கள் கணேசன், ஆறுமுகம், சண்முகவேல், இணை செயலாளர்கள் ஜெயகாந்தன், சுப்புலட்சுமி, அமைப்பு செயலாளர் செய்யது முகமது ஷரீப், பிரசார செயலாளர் அந்தோணிசாமி, தணிக்கையாளர் லட்சுமணன், செயற்குழு உறுப்பினர்கள் முகமது சுல்தான், முகைதீன் சாகிப், மகளிரணி செயலாளர் அற்புதமனி ஜாய் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.