பைக்கில் இருந்து தவறி விழுந்த பெண் பலி
குளத்தூர், செப். 25: விளாத்திகுளம் பாரதி நகரை சேர்ந்த பாலசுப்பிரமணியன் மனைவி ஜோதிலட்சுமி(47). இவரது மகள் முத்துக்கனி(21), மருமகன் முத்துராஜ்(23) ஆகியோர் நேற்று முன்தினம் பைக்கில் குலசைக்கு முத்தாரம்மன் கோயிலுக்கு சென்று மாலை போட்டுக்கொண்டு மூவரும் அதே பைக்கில் வீடு திரும்பினர். குறுக்குச்சாலை வழியாக குளத்தூர் நோக்கி வந்து கொண்டிருந்தபோது பைக்கில் இருந்து தவறி விழுந்த ஜோதிலட்சுமி பலத்த காயமடைந்தார். உடனே அவ்வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக குளத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஜோதிலட்சுமி ஏற்கனவே இறந்தவிட்டதாக கூறினர். இதுகுறித்து குளத்தூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்.
Advertisement
Advertisement