எட்டயபுரம் பேரூராட்சியில் வீடுகள் வழங்கும் திட்டத்தில் 37 பேருக்கு உத்தரவு வழங்கல்
எட்டயபுரம், நவ. 22: எட்டயபுரம் பேரூராட்சி பகுதியில் பிரதம மந்திரியின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் 37 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்ட அனைவருக்குமான உத்தரவுகளை பேரூராட்சி தலைவர் ராமலட்சுமி சங்கரநாராயணன் வழங்கினார். பயனாளிகள் ஒவ்வொருவருக்கும் வீடு கட்டுவதற்கு மத்திய, மாநில அரசு மூலம் 2.5 லட்சம் ரூபாய் 5 தவணைகளாக உதவி தொகை வழங்கப்படுகிறது. எனவே பயனாளிகள் விரைவாக முறையாக வீடுகள் கட்டிமுடித்து உதவிதொகையை முழுமையாக பெற்றுக் கொள்ளலாம் என பேரூராட்சி செயல் அலுவலர் மகாராஜன் வேண்டுகோள் விடுத்தார். நிகழ்ச்சியில் பேரூராட்சி அலுவலர்கள் ஜோதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Advertisement
Advertisement