சூரங்குடியில் ரூ.45 லட்சத்தில் சாலை பணிகள்
குளத்தூர், நவ.22: சூரங்குடியில் ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் கற்சாலை அமைக்கும் பணிகளை மார்க்கண்டேயன் எம்எல்ஏ துவக்கிவைத்தார். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம் சூரங்குடி கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் ஓரடுக்கு கற்சாலை அமைக்கப்படுகிறது. இதற்கான பணிகளை விளாத்திகுளம் எம்எல்ஏ மார்க்கண்டேயன் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் பிடிஓக்கள் ரஞ்சித், தங்கவேல், ஒன்றிய திமுக செயலாளர்கள் கிழக்கு சின்னமாரிமுத்து, மேற்கு அன்புராஜன், தெற்கு இம்மானுவேல், மாவட்ட பிரதிநிதி ராமலிங்கம், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் ரஞ்சித், ஒன்றிய பொருளாளர் முனியசாமி, துணைச் செயலாளர்கள் ராஜபாண்டி, சுப்பிரமணியன், ஒன்றிய பொறுப்புக்குழு உறுப்பினர்கள் பரமசிவபாண்டியன், நல்லமுகமது, ஜவஹர், மாரியப்பன், சூரங்குடி கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் சண்முகசுந்தரம், கிளைச் செயலாளர்கள் சரவணன், ஹரிகிருஷ்ணன், சுந்தர், சடையாண்டி, சந்திரசேகரன், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் பாரதிதாசன் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.