கச்சனாவிளையில் பயணிகள் நிழற்குடை சீரமைக்கப்படுமா?
நாசரேத்,செப்.22: நாசரேத் அருகே உள்ள கச்சனாவிளை ஊராட்சிக்குட்பட்ட கச்சனாவிளை மெயின்ரோட்டில் பழுதடைந்த நிலையில் பயணிகள் நிழற்குடைஉள்ளது. இந்த நிழற்குடை கடந்த சில ஆண்டுகளாகவே எந்தவித பராமரிப்பின்றி காணப்படுகிறது. இதன் அருகே கோயில், பள்ளிக்கூடம் மற்றும் வீடுகள் உள்ளன. இந்த சாலை வழியாக தினமும் ஏராளமான அரசு மற்றும் தனியார் பஸ்கள் சென்று வருகின்றன. இந்த நிலையில் தற்போது பயணிகள் நிழற்குடையில் மேற்கூரை கான்கிரீட் விழுந்து கிடக்கிறது.
எனவே, மேலும் இடிந்து விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, பள்ளி ஆசிரியர்கள், பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகளின் நலன் கருதி விரைவில் சீரமைத்தால் பயனுள்ளதாக இருக்கும். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு பழுதடைந்து கிடக்கும் கச்சனாவிளை பயணிகள் நிழற்குடையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கிராம மக்கள், மாணவ, மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.