ஆலந்தலையில் ரூ.80 லட்சத்தில் மீன் வலை பின்னும் கூடம்
திருச்செந்தூர், செப்.22: திருச்செந்தூர் அருகே ஆலந்தலையில் ரூ.80 லட்சம் மதிப்பில் மீன் வலை பின்னும் கூடம் கட்டுவதற்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அடிக்கல் நாட்டினார். ஆலந்தலையில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.80 லட்சம் மதிப்பில் மீன் வலை பின்னும் கூடம் கட்டுவற்கு அடிக்கல் நாட்டும் விழா நடந்தது.
விழாவிற்கு திருச்செந்தூர் கோட்டாட்சியர் கவுதம் தலைமை வகித்தார். விழாவில் சிறப்பு அழைப்பாளராக தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு புதிய மீன் வலை பின்னும் கூடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார்.
நிகழ்ச்சியில், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, திருச்செந்தூர் வட்டாட்சியர் பாலசுந்தரம், மீன்வளத்துறை இணை இயக்குனர் சந்திரா, உதவி இயக்குனர் பும்ரா சப்னா, செயற்பொறியாளர் கணபதி ரமேஷ், ஆலந்தலை பங்குதந்தை சில்வெஸ்டர், திருச்செந்தூர் நகராட்சி தலைவர் சிவஆனந்தி, துணை தலைவர் செங்குழி ரமேஷ், ஆணையாளர் ஈழவேந்தன், மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.