கோவில்பட்டி, கழுகுமலை, விஜயாபுரி செட்டிகுறிச்சி பகுதியில் நாளை மின்தடை
கோவில்பட்டி, செப். 19: மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக கோவில்பட்டி, கழுகுமலை, விஜயாபுரி செட்டிகுறிச்சி பகுதியில் நாளை (20ம் தேதி) மின்தடை செய்யப்படுவதாக மின் வாரியம் அறிவித்துள்ளது. இதுகுறித்து கோவில்பட்டி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் ரவி ராமதாஸ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கழுகுமலை, கோவில்பட்டி, எப்போதும் வென்றான், விஜயாபுரி, சிட்கோ, செட்டிகுறிச்சி, சன்னது புதுக்குடி ஆகிய துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மேற்கண்ட துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் தடைபடும்.
Advertisement
Advertisement