மடத்தூர் அரசு சுகாதார மையத்தில் தீ தடுப்பு பாதுகாப்பு ஒத்திகை பயிற்சி
தூத்துக்குடி, செப். 19: மடத்தூர் அரசு மருத்துவமனை சுகாதார மையத்தில் சிப்காட் தீயணைப்பு நிலையம் சார்பில் தீ தடுப்பு பாதுகாப்பு ஒத்திகை பயிற்சி நடந்தது. இதில் ஆரம்பகட்ட தீயை எவ்வாறு அணைப்பது, தீயணைப்பான்களை எவ்வாறு பயன்படுத்துவது, தீ மேலும் பரவாமல் எவ்வாறு தடுப்பது, தீயில் இருந்து எவ்வாறு தப்பிப்பது? காயமடைந்தவர்களை எவ்வாறு மீட்பது என்பது குறித்து தீயணைப்பு வீரர்கள் செயல்முறை விளக்கம் அளித்தனர். இந்த பயிற்சியில் மருத்துவமனை செவிலியர்களுக்கும், பணியாளர்களுக்கும், நோயாளிகளுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருந்தது என மருத்துவ அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
Advertisement
Advertisement